search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவர்கள் பலி"

    • மீனவர் ஒருவர் மீன்பிடிக்க வலை வீசிய நிலையில், வலையில் சிறுவர்கள் சடலமாக சிக்கினர்.
    • சிறுவர்களின் உடலை மீட்டு அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை.

    விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்ல்லூர் பகுதியில் உள்ள கோட்டமருதூர் ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    சிறுவர்கள் ஹரிஹரன் (11), ஜீவிதன் (10) மற்றும் தர்ஷன் (8) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    மீனவர் ஒருவர் மீன்பிடிக்க வலை வீசிய நிலையில், வலையில் சிறுவர்கள் சடலமாக சிக்கினர்.

    இதைதொடர்ந்து, சிறுவர்களின் உடலை மீட்டு அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மின்சார ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தை 3 பேரும் கவனிக்காமல் சென்று கொண்டிருந்தனர்.
    • சுரேஷ், ரவி, மஞ்சு நாதா ஆகிய 3 சிறுவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது.

    செங்கல்பட்டு:

    ஊரப்பாக்கம் ரெயில் நிலைய பகுதி விடுமுறை தினமான இன்று பரபரப்பாக காணப்பட்டது. காலை 11 மணி அளவில் 3 சிறுவர்கள் தண்டவாளத்தை கடந்தனர். மின்சார ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தை 3 பேரும் கவனிக்காமல் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற மின்சார ரெயில் 3 பேர் மீதும் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 சிறுவர்களும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதைப் பார்த்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் தாம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்டவாள பகுதியில் சிதறி கிடந்த 3 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினார்.

    இதில் சுரேஷ், ரவி, மஞ்சு நாதா ஆகிய 3 சிறுவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. 3 பேரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    சுரேசுக்கு 15 வயது ஆகிறது. ரவிக்கு வயது 12. அண்ணன்-தம்பிகளான இருவரும் வாய் பேச முடியாதவர்கள். 15 வயதான சிறுவன் மஞ்சுநாதாவுக்கு காது கேட்காது.

    3 சிறுவர்களும் பெற்றோர்களுடன் வந்திருந்தபோதுதான் எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தை கடந்து உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    • விபத்தில் 2 சிறுவர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • விபத்து குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் சுக்கம்பட்டி காந்தி நகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மது சாந்தன் (வயது 14). இவன் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இதேபோல், சுக்கம்பட்டி ராஜவீதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் நவீன் (14) பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தான்.

    இந்த நிலையில் நவீன் தனது தந்தை ராஜாவின் பைக்கை எடுத்துக் கொண்டு மாணவர் மது சாந்தனை அழைத்து கொண்டு இருவரும் அயோத்தியாபட்டணம் சென்று விட்டு மீண்டும் சுக்கம்பட்டி திரும்பினர்.

    அப்போது அரூர் மெயின் ரோடு தேவாங்கர் காலனி அருகே வந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றனர். அப்போது எதிரே வந்த லாரி, பயங்கரமாக மோட்டர் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் லாரியில் சிக்கி மாணவன் மதுசாந்தன் சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தான். நவீன் பலத்த காயம் அடைந்தான்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீராணம் போலீசார் மற்றும் பொது மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவன் நவீனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1 மணியளவில் நவீன் பரிதாபமாக இறந்தான். அவனது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 சிறுவர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தேனி ரெயில் நிலையம் அருகே இருந்த தற்காலிக குட்டையில் சிறுவர்களின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • குட்டை மற்றும் நீர்நிலைகளில் சிறுவர்கள் மூழ்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த சிவராஜா மகன் சிவசாந்தன்(12). தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் வீரராகவன்(12). இவர்கள் 2 பேரும் தேனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். நண்பர்களான இவர்கள் பள்ளி விடுமுறை என்பதால் நேற்று மாலை விளையாட சென்ற அவர்கள் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் இன்று காலை தேனி ரெயில் நிலையம் அருகே இருந்த தற்காலிக குட்டையில் சிறுவர்களின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு சிறுவர்களின் உடல்களை சடலமாக மீட்டனர். பின்னர் இருவரது உடல்களும் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பாதுகாப்பு இல்லாத குட்டை மற்றும் நீர்நிலைகளில் சிறுவர்கள் மூழ்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரையில் இன்று கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.
    • மீன்பிடிக்க சென்றபோது இந்த சம்பவம் நடந்தது.

    மதுரை

    மதுரை கருப்பாயூரணியை அடுத்துள்ள சக்கிமங்கலம் சவுராஷ்டிரா காலனியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஆதிசேசன் (வயது 14). 8ம் வகுப்பு படித்து வந்தார். இவரது வீட்டின் அருகே வசிப்பவர் கண்ணன். இவரது மகன் ஹேமன் (வயது 8). 3ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையை முன்னிட்டு வீட்டில் இருந்த 2 பேரும் இன்று மதியம் சக்கிமங்கலம் கண்மாய்க்கு மீன்பிடிக்க சென்றதாக தெரிகிறது.

    கண்மாயில் ஹேமன் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி தண்ணீரில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதிசேசன், ஹோமனை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்ததாக கூறப்படுகிறது.

    2 பேரும் ஆழமான பகுதிக்குள் சென்று சிக்கியதால் கரைக்கு திரும்ப முடியாமல் தத்தளித்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிலைமான் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 சிறுவர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக சிறுவர்களின் உடலை பார்த்து பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்த்திக், ஹரிஷ் குமார் இருவரும் கோவிலின் முன்பு செல்லும் தாமிரபரணி ஆற்றின் அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
    • வனத்துறையினர் 2 சிறுவர்களின் உடலையும் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சிங்கை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூரை சேர்ந்தவர் சரவணன். அதே பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுகுமார். உறவினர்களான இவர்கள் 2 பேரும் தங்களது குடும்பத்தினருடன் இன்று காலை நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவில் பங்கேற்பதற்காக ரெயிலில் நெல்லை வந்து சேர்ந்தனர்.

    அங்கிருந்து பஸ்சில் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்றனர். அங்கு சரவணன் மகன் கார்த்திக் (வயது 8) மற்றும் விஷ்ணு குமாரின் மகன் ஹரிஷ் குமார் (10) ஆகிய 2 பேரும் கோவிலின் முன்பு செல்லும் தாமிரபரணி ஆற்றின் அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரையும் காணவில்லை. இதனால் சிறுவர்களின் உறவினர்கள் அந்த பகுதியில் தேடிப் பார்த்தனர். அப்போது கார்த்திக்கும், ஹரிஷ் குமாரும் தண்ணீரில் பிணமாக மிதந்து கொண்டிருந்தனர்.

    இதனைப் பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த வனத்துறையினர் 2 சிறுவர்களின் உடலையும் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கண்மாயில் சிறுவர்கள் உயிரிழந்தனர்.
    • இச்சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, தென்கரை பேரூராட்சி, டி.கைலாசபட்டி பாப்பயம்பட்டி கண்மாயில் குளித்த போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மரணமடைந்த பன்னீர்செல்வம் மற்றும் சிறுவர்களான மணிமாறன், சபரிவாசன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    பேரணாம்பட்டு அருகே தண்னீர் தொட்டியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகேயுள்ள எரிகுத்தி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் புவனேஷ் (4) பேரணாம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த குமரேசன் உறவினரான சங்கர் மகன் மிதிலேஷ் (2½). இருவரும் நேற்று மாலை சுரேஷ் என்பவரின் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர்.

    நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டிற்கு திரும்பவில்லை. குழந்தைகள் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர். ஊர் முழுவதும் தேடி பார்த்தனர். குழந்தைகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சுரேஷ் என்பவரின் வீட்டின் முன்பு இருந்த மூடப்படாத குடிநீர் தொட்டியில் இருவரும் மூழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது. குழந்தைகளின் உடலை பார்த்து பெற்றோர்கள் கதறி, அழுதனர். இதுகுறித்து குமரேசன் பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார். 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்னர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். #tamilnews
    சூடானில் வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக சிறுவர்கள் முயன்ற போது எதிர்பாராத வகையில் அந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் 8 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர். #Sudan #ScrapMetal #Blast
    கார்டூம்:

    சூடானில் கடும் பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் உணவு பொருட்களின் விலை உச்சத்தில் இருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் பணத்துக்காக ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தலைநகர் கார்டூமில் உள்ள ஓம்டுர்மான் நகரில் ராணுவ பயிற்சி மையத்துக்கு அருகே வெடிகுண்டு ஒன்றை சிறுவர்கள் கண்டெடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக அதனை செயலிழக்க செய்ய முயன்றனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் 8 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர்.   #Sudan #ScrapMetal #Blast 
    திருச்சூரில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ராமவர்மாபுரத்தில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு வசிப்பவர் ஆயுதப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் அகுள். இவரது மனைவி பிரிதா. இவர்களது மகன் அஜி கிருஷ்ணன் (வயது 7). இதே குடியிருப்பை சேர்ந்த போலீஸ்காரர் அருண். இவரது மகன் அபிமன்யூ (9). குடியிருப்பு வளாகம் பகுதியில் ஒரு குளம் உள்ளது.

    நேற்று மாலை சிறுவர்கள் அங்குள்ள குளம் அருகே விளையாடினர். விளையாடி முடிந்ததும் அனைவரும் வீடு திரும்பினர். அஜி கிருஷ்ணன், அபிமன்யூ ஆகியோரை காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவர்களை தேடினர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    சிலர் குளத்தை எட்டிப்பார்த்தபோது சிறுவர்கள் 2 பேரும் பிணமாக மிதந்தனர். தகவல் அறிந்ததும் திருச்சூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 2 சிறுவர்களின் உடல்களையும் மீட்டனர். பெற்றோர் சிறுவர்களின் உடல்களை பார்த்து கதறி துடித்தனர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து திருச்சூர் போலீசார் விசாரணை நடத்தினர். விளையாடியபோது குளத்தில் தவறி விழுந்து சிறுவர்கள் பலியானது தெரியவந்தது.

    கூடங்குளம் அருகே கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் ரிஷோர் (வயது 10). அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் சந்திராயப்பன் (10). இந்த 2 சிறுவர்களும் நண்பர்கள் ஒன்றாக 5-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் அடிக்கடி ஒன்றாக சென்று விளையாடுவர்கள்.

    நேற்று பகல் 11.30 மணி அளவில் ரிஷோரும், சந்திராயப்பனும் பெருமணல் கடல் பகுதிக்கு குளிக்க சென்றனர். அவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மகன்கள் என்பதாலும் இரண்டு பேருக்கும் நீச்சல் தெரியும் என்பதாலும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிறுவர்கள் கடற்கரையில் விளையாடுவதை தடுக்கவில்லை.

    2 சிறுவர்களும் கடற்கரை ஓரத்தில் அலை அடிக்கும் பகுதியில் குளித்து விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீர் என்று ஒரு ராட்சத அலை அடித்தது. இதில் கரையோரம் குளித்துக்கொண்டு இருந்த 2 சிறுவர்களையும் அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அவர்கள் கத்தி அபாயகுரல் எழுப்பினார்கள். அப்போது அருகில் யாரும் இல்லாததால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. அலை சுருட்டி இழுத்துச்சென்றதால் 2 சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி பலியானார்கள்.

    அப்போது சத்தம் கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு ஓடி வந்து பார்த்தனர். ஆனால் அதற்குள் 2 சிறுவர்களும் பலியானதால், அவர்கள் 2 சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.

    இதுகுறித்து கூடங்குளம் கடலோர காவல்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெதர்லாந்து நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது ரெயில் மோதிய விபத்தில் 4 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர். #Accident
    ஆம்ஸ்டர்டாம்:

    நெதர்லாந்து நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆஸ் நகரில் கார்கோ சைக்கிளில் சிறுவர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர்.

    அவர்கள் அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் சைக்கிள்மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் சைக்கிளில் சென்ற 4 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயம் அடைந்தார்.

    தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கார்கோ சைக்கிள் மீது ரெயில் மோதியதில் 4 சிறுவர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Accident
    ×